உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்; வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி பணிப்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
112 பார்வைகள்

வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தும், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு முந்தைய ஆலோசனைகளை மேற்கொண்டும் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறையாக விளங்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக முறையான ஓய்வூதியத் திட்டமொன்றின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு பணித்தார்.

சுற்றுலாத்துறை சார்ந்த திட்டங்களை மாவட்ட மட்டத்தில் செயற்திறனுடன் முன்னெடுக்க, நிதி ஒதுக்கீடுகளை நேரடியாக மாவட்ட செயலாளர்களிடம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து திட்டங்களை விரைவாகச் செயற்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சிகிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து ஒரு பொதுவான திட்டத்தின் கீழ் செயற்படுத்துவதன் மூலம் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த முடியும் என்றார்.

திட்டங்களைச் செயல்படுத்துவதில் கொள்முதல் நடைமுறைகளால் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, ஜனவரி முதல் வாரத்திலேயே கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு நிதி அமைச்சின் புதிய திட்டத்தைப் பின்பற்றுமாறு பணித்தார். அத்துடன், சுற்றுலா அமைச்சின் நிர்மாணத்துறை போன்ற விசேட கொள்முதல் தேவைகளை விரைவுபடுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறைக்குத் தேவைப்படும் 8 இலட்சம் மனித வளத் தேவையைப் பூர்த்தி செய்ய, ஹோட்டல் பாடசாலைகளின் பயிற்சிப் பாடநெறிகளை விரிவுபடுத்தவும், அமைச்சின் கீழ் உள்ள வளங்கள் மற்றும் காணிகள் குறித்த முறையான அறிக்கையைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

தூதரக சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஆசிய ஒளிபரப்பாளர்களின் மாநாடு உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

64 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

56 0 0