உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

இந்திய செய்திகள் 48 நிமிடங்கள் முன்
61 பார்வைகள்

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

மாநில அளவில் வெற்றிக்கழகத்துடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அடுத்த பிரதமர் தென்னிந்தியாவிலிருந்துதான் வர வேண்டும், விஜய்தான் நாட்டின் அடுத்த பிரதமர்” என தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.

அத்துடன், வட மாநில சமூக வலைதளங்களில் விஜய்க்காக தீவிரப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது காங்கிரஸ் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவில் தேசிய அளவில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் சூழலில், தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தினரின் இந்த செயற்பாடு குறித்து, காங்கிரஸ் குழுத் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

யாராவது கனவு காண்பதைத் தடுக்க முடியாது என்றும், எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பிடிப்பது மட்டுமே ஒருவரைப் பிரதமராக்கும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தமிழகத்தில் ஆட்சி நிலைத்தன்மைக்காக விஜய்யுடன் கைகோர்த்துள்ள காங்கிரஸ், தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் நிலைக்குச் சவாலாக இது அமையக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

திருமாவளவனின் அறிவிப்பு : கண்டுகொள்ளாத விஜய்!

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்கு விஜய் பதில் கூறாமை தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்ந்து…

36 0 0
இந்திய செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில…

43 0 0
இந்திய செய்திகள்

கர்நாடகாவில் வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொ@லை – வெளியாகியது பிரேத பரிசோதனை அறிக்கை!

கர்நாடகாவில் மான் வேட்டையாடியதாகக் கூறி மூன்று தமிழர்களை வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில், அவர்கள் அருகில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக…

63 0 0
இந்திய செய்திகள்

தமிழக வெற்றிக்கழக அமைச்சர் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு!

ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு முதல் பெரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள…

78 0 0