கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை
தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர்
குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ எல் முனாஸ் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்
மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் வசிக்கும் 68 வயதான ஒரு பிள்ளையின் தாயான அவர் கடந்த 23 ஆம் திகதி கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமானார்
குறித்த மரணமான பெண் தனது வீட்டில் கணவருடன் தங்கி இருந்த நிலையில் கணவரின் நண்பரான சந்தேக நபருடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் போது கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர் .
சந்தேக நபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்