உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

இலங்கை செய்திகள் 60 நிமிடங்கள் முன்
51 பார்வைகள்

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது செய்தி சேவைக்கு அனுப்பியுள்ளார்.

கடந்த 24/08/2026 திங்கட்கிழமை 15 நிமிடங்கள் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து கேவிலிலிருந்து மருதங்கேணி ஊடாக பருத்தித்துறைக்கு தனது முதலாவது சேவையை 15 நிமிடங்கள் முன்னதாக மேற்கொண்ருந்தது இதனால் வளமையாக செல்கின்ற உத்தியோகத்தர்கள், வடமராட்சி கிழக்கின் பல கிராமங்களுலிருந்தும் க.பொ.த.உயர்தர பரிட்சைக்காக அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பருத்தித்துறை நகரின் பல பாடசாலைகளில் பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் பேருந்தை தவற விட்டிருந்த நிலையில் மிக மிக சிரமங்களுக்கு மத்தியில் அவசர அவசரமாக உரிய நேரத்திற்கு வாகனங்களிலும், நடந்தும் சென்றிருந்தார்கள்.

மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டது தொடர்பில் எமது செய்தி சேவை செய்தியை வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் பருத்தித்துறை சாலை முகாமையாளர் எம்மை தொடர்பு கொண்டு விளக்கம் ஒன்றை அனுப்பியிருக்கின்றார். அதன் முழு விவரம் வருமாறு.

தமது முதலாவது பேருந்து சேவை கேவிலிலிருந்து மருதங்கேணியூடாக 5:45 மணிக்கு புறப்படுவது வழமை என்றும், ஆனால் தனியார் போக்குவரத்து சேவையினர் தங்களது சேவையினை குழப்பும் வகையில் அன்றைய தினத்ததிலிருந்து 5:45 மணிக்கு கெவிலிலிருந்து சேவையை ஆரம்பிக்க வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அனுமதியளித்திருந்ததாகவும் இதனால் தாம் அன்றிலிருந்து காலை 5:30 மணிக்கு சேவையை ஆரம்பித்ததாகவும், ஆனால் அத்தனையும் குழப்பம் வகையில் தனியார் போக்குவரத்து சங்கம் தாங்கள் புறப்பட தயாரான நேரமான 5:30 மணிக்கு புறப்பட்டதாகவும், இதனால் தான் குறித்த நாள் பரீட்சை எழுத செல்லவிருந்த மாணவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டதாகவும், இந்த நிலைமைக்கு வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைதான் காரணம் என்றும் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எது எவ்வரையினும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள், பருவ கால சிட்டை பயன்படுத்துவோருக்கு முன்னறிவித்தல் எதுவும் வழங்கப்படாமை ஏற்றுக் கொள்ள முடியாத அதேவேளை ஒரு பொறுப்பில்லாத செயலாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

63 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

62 0 0