உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 48 நிமிடங்கள் முன்
55 பார்வைகள்

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை.

இலங்கை நிர்வாக சேவை தரம் 2 இல் உள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியிடத்திற்குச் செல்வதற்கு தனிப்பட்ட ரீதியில் அரச வாகனங்களை பயன்படுத்த முடியாது எனவும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நிர்வாக சேவை அதிகாரிகள் இணைந்து நாளொன்றுக்கு 50 கிலோமீற்றருக்கு உட்பட்டு பயன்படுத்தலாம் எனவும் நிர்வாக அதிகாரிகளுக்கான தாபன விதிக்கோவையில் சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு முரணாக சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி சபை அனுமதித்தால் தான் வாகனம் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தி வாகனம் பயன்படுத்த அனுமதிப்பது என தீர்மானம் நிறைவேற்ற செய்துள்ளார்.

இதன்போது உறுப்பினர்களால் குறித்த தீர்மானம் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்து அவரது அனுதியின் பின்னரே வாகனத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் உறுப்பினர்கள் கூறிய விடயங்கள் சபைக் கூட்ட அறிக்கையில் உள்ளடக்கப்படாததோடு உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்காமலும் தினமும் YY 3619 இலக்கமுடைய நகரசபையின் முச்சக்கரவண்டியில் சாவகச்சேரி நகரசபை எல்லை தாண்டி சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லை தாண்டியும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குள் உரும்பிராய் வரையும் தினமும் காலை மாலை என இரண்டு தடவைகள் சுமார் 80 கிலோமீற்றர்கள் வரை பயணித்துள்ளார்.

கைதடி வரையுமே வாகனத்தை பயன்படுத்த போவதாக சபைக்கு தெரிவித்த நிலையில் உரும்பிராய் வரை சென்று வந்துள்ளார்.

எனினும் வாகனப் போக்குவரத்து பதிவேடுகளில் தினமும் இரண்டு தடவைகள் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் இருந்து உரும்பிராய் சென்று வருகின்றமை தொடர்பில் பதிவு செய்யாமல் நகரசபை எல்லைக்குள் பல்வேறு தடவைகள் பயணித்தமை போன்று பதிவு செய்து எரிபொருள் நிரப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதேவேளை நகரசபையின் தவிசாளர் தனது அலுவலக கடமைகளுக்கு கூட இதுவரை தனது சொந்த வாகனத்தினையே பயன்படுத்தி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலே சபையின் செயலாளர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனிப்பட்ட போக்குவரத்துக்கு சபை வாகனத்தை பயன்படுத்துகின்றார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

சாவகச்சேரி நகராட்சி மன்றில் இதுவரை செயலாளர்களாக கடமையாற்றியவர்கள் தூர இடங்களில் இருந்தாலும் தமது சொந்த வாகனங்களிலேயே அலுவலகத்துக்கு வந்ததோடு அலுவலக கடமைகளுக்கு மட்டுமே சபையின் வாகனங்களை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

25 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

52 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

73 0 0