மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன் எனும் இளைஞன் இன்று ( 27/08/2026 ) பிற்பகல் 5 மணி அளவில் தனது வீட்டில் கையடக்க தொலைபேசியை சாஜ் செய்தவாறு நெஞ்சில் வைத்துக்கொண்டு உறங்கிய நிலையில் மின்சாரம் தடைப்பட்ட சந்தர்ப்பத்தில் கைத் தொலைபேசி வெடித்து குறித்த இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இம் மரணம் வாழைச்சேனை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது