உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

வெளியேற்றப்பட்ட ராகலை மக்களுக்கு அதே வீடுகளை வழங்குவதில் சட்ட சிக்கல் இல்லை.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
72 பார்வைகள்

வெளியேற்றப்பட்ட ராகலை நடுக்கணக்கு மக்களுக்கு மீண்டும் அதே வீடுகளை வழங்குவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என அம்பகமு பிரதேச சபையின் உறுப்பினர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 203 ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கிய மலையக சமூகத்தின் உறவுகளான இராகலை நடுக்கணக்கு தோட்டத்தை சேர்ந்த 06 குடும்பங்கள் குறித்த தோட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு சொந்த பணத்தில் வீடமைத்து சுமார் 30 வருடங்களாக வாழ்ந்த வாழ்விடத்திலிருந்து இலங்கை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு நீதிமன்ற வழக்கொன்றை தாக்கல் செய்து தீர்ப்பின் அடிப்படையில் எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் வெளியேற்றியுள்ளமையானது மலையக பெருந்தோட்டத் துறையில் 200 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியிலும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு காணி அமைச்சரும் அரசாங்கமும் மனிதாபிமான அடிப்படையில் நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டுமென நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளரும் அம்பகமு பிரதேச சபையின் உறுப்பினருமான இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரச காணிகளில் அத்துமீறி குடியேறிவர்களை வெளியேற்றுவதில் அமைதிகாக்கும் அரச நிறுவனங்கள் பெருந்தோட்டத்திற்கு நடுவில் அடுத்த அங்குலம் காணி நடுக்கணக்கு தோட்டத்திற்கு சொந்தமாக இருக்கும்போது ஆறு வரிசை வீடுகளை கொண்ட சிறிய அளவிலான காணியை கையகப்படுத்தியதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின்(LRC) இந்த நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றது .

மேலும் குறித்த குடும்பங்கள் அத்துமீறி அந்த இடத்தில் குடியேறவில்லை தோட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு குடியேறியுள்ளனர்.

இந்த முப்பது வருடத்தில் தங்களின் நீண்டகால உழைப்பில் எஞ்சிய தொகையான EFF பணத்தை செலவிட்டே அந்த வீடுகளை திருத்தியமைத்துள்ளார்கள்.

திருத்தப்பணிகளுக்கு ஒருவர் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை செலவு செய்துள்ளார். ஏனையோரும் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்துள்ளார்கள். இவ்வளவு சிரமப்பட்டு உருவாக்கிய அவர்களுடைய வாழ்விடத்திற்கு அந்நியராக்கிவிட்டு அந்த வீடுகளை உடைத்து தரைமட்டமாக்குவதினால் யாருக்கு என்ன இலாபம்.

எது எப்படியோ வழக்கு முடிந்து தீர்ப்பு நிறைவேற்றப்பட்டு விட்டது. அந்த அப்பாவி குடும்பங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். இந் நாட்டுக்காக உழைத்துக் கொடுத்த அந்த குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர்.

அந்த குடும்பங்களுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துவிட்டன. இப்போது அந்த நிலம் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு(LRC) சொந்தமாகியுள்ளன. இனி அந்த இடம் தொடர்பாக காணி அமைச்சரும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவும் சுதந்திரமாக முடிவெடுக்கலாம். காணி அமைச்சர் அந்த இடத்தை மீண்டும் குறிப்பிட்ட குடும்பங்களுக்கு வழங்குவதில் எந்த சட்டசிக்கலும் இல்லை என்று சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

அப்படியென்றால் அந்த இடத்தை மீண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கே வழங்குவதற்கான முடிவை காணி அமைச்சர் ஏன் எடுக்கக்கூடாது. பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில் கெளரவ கே.டி.லால்காந்த அவர்கள் சாதகமான முடிவொன்றை எடுப்பார் என்று நம்புகிறோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில்…

66 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை!

கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை…

55 0 0
இலங்கை செய்திகள்

செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக…

86 0 0
இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

55 0 0