உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
13 திங்கள்

இன்று மாலை அரச மரியாதையுடன் விடைபெறுகிறார் இசைக்குயில்!

இந்திய செய்திகள் 13 மணி நேரம் முன்
32 பார்வைகள்

பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் இன்று (12) காலை அவரது இல்லத்திலிருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்திற்கு எடுத்துச் செல்லபட்டுள்ளது.

அங்கு பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 4.00 மணியளவில் மைசூரில் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் கர்நாடக அரசின் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்பு காரணமாக நேற்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடியுள்ளார்.

இவர் நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழப்பு – பலரை மீட்கும் பணி தீவிரம்!

டெல்லியில் கட்டுமானப் பணியில் இருந்த 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில்…

17 1 0
இந்திய செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று கரூரிற்கு விஜயம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு இன்று செல்கிறார். கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் பிரசாரத்தின் போது…

16 1 0
இந்திய செய்திகள்

கர்நாடகாவில் கோரவிபத்து – 7 பேர் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். கர்நாடக மாநிலம்…

13 0 0
இந்திய செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான எரிவாயு சிலிண்டர்கள்!

மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் படல்கங்கா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG) நிரப்பும் ஆலையை கனமழை சூழ்ந்தன. இதனால், அங்குள்ள…

11 0 0