உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கட்டாரின் முன்னாள் மன்னரின் மறைவுக்கு இந்தியாவில் துக்கம் அனுஷ்டிப்பு!

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
144 பார்வைகள்

கட்டாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி( Emir Sheikh Hamad bin Khalifa Al-Thani) , தனது 74-வது வயதில் காலமானார்.

இவரது மறைவுக்கு மதிப்பளிக்கும் வகையில், இன்று இந்தியா முழுவதும் ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இதற்கமைய, அரசு அலுவலகங்கள் மற்றும் தேசியக் கொடி பறக்கும் அனைத்து இடங்களிலும் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், இன்று எந்தவித அரச கேளிக்கைகளும் இடம்பெறாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியை, கட்டாரை பெரும் வளர்ச்சி மற்றும் செழுமைப் பாதையில் வழிநடத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 2024 பெப்ரவரி மாதம் கட்டார் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், அவர் ஒரு சிறந்த நண்பர் என்றும் பிரதமர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை! : 9 பேர் உயி@ரிழப்பு!!

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாகா இனத்தவர்கள் 6 பேர் மற்றும் நேபாள வம்சாவளியைச்…

40 0 0
இந்திய செய்திகள்

தவெக கூட்டணியில் பாமக இணைந்தால், விசிக வெளியேறும் : அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!

தவெக கூட்டணியில் பாமக இணைந்தால், விசிக வெளியேறும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார். திருமாவளவனின் தலைமையில் நடந்த கூட்டத்தில், சாதி ஒழிப்பு மற்றும் தமிழ்த் தேசியம் குறித்து…

54 0 0
இந்திய செய்திகள்

தனக்கு தமிழ் மீதுள்ள அன்பை விபரித்த இந்திய பிரதமர் மோடி

தமிழகம்- சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பாடசாலை ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி மற்றும் மகாகவி பாரதியார்…

66 0 0
இந்திய செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வெற்றி பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று த.வெ.க. வேட்பாளர்கள் அபார…

91 0 0