உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! – இந்தியர் பலி!!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
116 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன.

இந்தத் தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பாஹியா’ (Al Bahiyah) ஆகிய இரு கப்பல்களே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

ஒமான் கடல் எல்லைக்குள், ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதையில் இந்தக் கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0