உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு இரண்டு வருடங்கள் சிறை!

உலக செய்திகள் 9 மணி நேரம் முன்
59 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தென் கொரிய நீதிமன்றம் ஒன்று திங்கள்கிழமை (13) தீர்ப்பளித்துள்ளது.

அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 270 மில்லியன் வோன் (1,79,800 டொலர்) மதிப்புள்ள கருத்துக்கணிப்புச் சேவைகளைச் சட்டவிரோதமாக இலவசமாகப் பெற்ற குற்றத்திற்காக அவருக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின்படி, அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 14 முறை இலவசமாக கருத்துக்கணிப்பு சேவைகளைப் பெற்றதன் மூலமும், அவருக்குப் பிரதிபலனாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வேட்பாளர் நியமனத்தில் செல்வாக்கு செலுத்தியதன் மூலமும் யூன் அரசியல் நிதி தொடர்பான சட்டங்களை மீறியுள்ளதாக சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை யூன் மறுத்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய முடியும்.

65 வயதான யூன் மீது எட்டு சட்டரீதியான வழக்குகள் உள்ளன.

2024-ல் அவர் குறுகிய காலத்திற்கு அமுல்படுத்திய ராணுவச் சட்டத்துடன் தொடர்புடைய கிளர்ச்சிக்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பெப்ரவரி மாதம் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து அவர் தற்போது மேல்முறையீடு செய்து வருகிறார்.

அவரைக் கைது செய்வதற்கான அதிகாரிகளின் முயற்சியைத் தடுத்ததற்காக அவருக்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறைத்தண்டனையை உறுதிசெய்து கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் இதில் அடங்கும்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! – இந்தியர் பலி!!

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர்…

66 0 0
உலக செய்திகள்

பங்களாதேஷில் கனமழை – 51 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு…

76 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு 20% வரி – அமெரிக்கா அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையின் மீதான புதிய முற்றுகை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கா 20% கட்டணத்தை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள்…

73 0 0
உலக செய்திகள்

பயணப் பாதையில் வாசகம் அமைத்த விமானி!

லிவர்பூல் நகருக்கு அருகில் பறந்த விமானி ஒருவர், தனது வானுர்தி பயணப்பாதையை மாற்றியமைத்து வானில் ‘I’m bored’ என்ற வாசகத்தை உருவாக்கியுள்ளார். இந்தச் செயல் சமூக வலைதளங்களில்…

81 0 0