உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
15 புதன்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
128 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவர் நேற்றைய தினம் நீதிமன்ற வழக்கு விசாரணை நடைபெற்ற போது , குறித்த நபரின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்து உத்தரவிட்டது.

அதனை அடுத்து விளக்கமறியல் கைதியை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற போது, குறித்த நபர் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம்; பின்னணியில் அநுர அரசு இல்லை.!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின் பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…

50 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் நடராசாவின் தாயார் காலமானார்.!

‘ராவய’ வெளியீடான ‘ஆதவன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவரும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பிராசா நடராசாவின் தாயார் திருமதி விசாலாட்சி…

54 0 0
இலங்கை செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்துக்கு முரணான செயல்.!

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி…

62 0 0
இலங்கை செய்திகள்

உளவுத்துறை அறிக்கையின்படியே பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு.!

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுகின்றதே தவிர, அது…

69 0 0