உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மதுரையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
133 பார்வைகள்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் திங்கட்கிழமை (13) அதிகாலையில் அரசுப் பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 42 பேர் காயமடைந்ததாகவும், 5 பேர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரை பொலிஸாரின் தகவலின்படி, கொட்டாம்பட்டிக்கு அருகிலுள்ள வண்டினகரம் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

தனியார் பேருந்து ஓட்டுநர் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படும் நிலையில், அப்பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி எதிர்ச் சாலையில் புகுந்து, மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த மோதலால் தனியார் பேருந்தின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது; அதேவேளையில், அரசுப் பேருந்து கவிழ்ந்தது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், கொட்டாம்பட்டி காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு பேருந்துகளிலும் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணிகளைத் தொடங்கினர்.

விபத்தில் நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தைகள் உட்பட மொத்தம் 42 பேர் பலத்த காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸ் அறிக்கை மேலும் தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0