உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி நான்காவது வாரமாகவும் பலாலி மக்கள் போராட்டம்

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
40 பார்வைகள்

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 36 வருடங்களாக உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவித்து, தங்களை மீண்டும் குடியேற்றக் கோரி யாழ். பலாலிச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்றது.

பலாலி மீள்குடியேற்ற அமைப்பு மற்றும் பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது காணிகளை இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளுக்கும், வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கும் சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக 36 வருடங்களாகத் தமது சொந்த நிலங்கள் மற்றும் வீடுகள் இன்றி அகதி நிலையில் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இன்று போராட்ட இடத்தில் மக்கள் கொட்டகை அமைத்துத் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க முயற்சித்த போதிலும், பொலிஸார் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இருப்பினும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து வீதியில் அமர்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்டகாலமாக நிலமற்ற நிலையில் உள்ள தமக்கு, அரசு உடனடியாகத் தலையிட்டுத் தமது பூர்வீகக் காணிகளை விடுவித்துத் தர வேண்டும் என்பதே தங்களின் ஒரே கோரிக்கை எனப் போராட்டக்காரர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில்…

66 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை!

கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை…

55 0 0
இலங்கை செய்திகள்

செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக…

86 0 0
இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

55 0 0