உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மதுபான விற்பனை நிலையங்களின் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சத்தியமூர்த்தி ரதிதேவி அவர்களின் தலைமையில் மதுபான விற்பனை நிலையங்களின் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல் எனும் தொனிப்பொருளில் நேற்று 2026.03.16 அன்று கலந்துரையாடல் செயலமர்வு நிகழ்வானது ஹோல்புரூக் பௌத்த விகாரை மண்டப வளாகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அக்கரப்பத்தனை பிரதேச சபை உப தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், செயலாளர், சபை உத்தியோகஸ்தர்கள் அவர்களுடன் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி, சிறப்பு அதிரடிப்படை பிரிவிற்கான பொறுப்பதிகாரி, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்கான பொறுப்பதிகாரி, லிந்துலை பொலிஸ் பிரிவிற்கான பொறுப்பதிகாரி, டயகம பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் மதுபான கடை உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் அற்ற சமுதாயமொன்றை இலங்கையினுள் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு செய்தல் மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மதுபான விற்பனை வியாபார கடைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இக் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

65 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

56 0 0