பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளுடன் மயங்கி விழுந்த நபர்; பொலிஸாரின் மனிதாபிமான செயற்பாடு.!
தலவாக்கலை வீதியில் மயங்கி விழுந்த ஒருவரை மீட்டு, அவரிடமிருந்த சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை தலவாக்கலை பொலிஸார் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறான செயலை தலவாக்கலை பொலிசார் முன் மாதிரியாக செயல்பட்டுள்ளனர்.
கடந்த 14.03.2026 அன்று சனிக்கிழமை தலவாக்கலை நகரில் நபர் ஒருவர் சுவாசக் கோளாறு காரணமாக மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உதவ முன்வராத நிலையில், போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத் மடுலகல்ல தலைமையிலான குழுவினர் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மயங்கி விழுந்தவரிடம் இருந்த தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை மீட்ட பொலிஸார், இன்று 17 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அவற்றை உறவினர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
பொலிஸாரின் இந்த மனிதாபிமான மற்றும் துரித செயலை தலவாக்கலை பகுதியில் உள்ள பலரும் பாராட்டி வருகின்றனர்.