உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை நேரில் சென்று ஆராய்ந்த நீதிபதி உள்ளிட்ட குழுவினர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
20 பார்வைகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த மார்ச் 09ஆம் திகதி இடம்பெற்ற குறித்த மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பிரதேசத்தினை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக குழுவினர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட போது அப்பிரதேசம் குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்புப் பட்டிகள் இடப்பட்டிருந்த நிலையில் அந்த பாதுகாப்பு பட்டிகள் அகற்றப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டமையால் குறித்த பிரதேசத்தினை நீதவான் பரிசீலனை செய்வதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அந்தத் தீர்மானத்திற்கமைய இன்றைய குறித்த விஜயம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர், இன்றைய விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த வழக்கின் சட்டத்தரணி முபாரக் முஹாசன் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் 30ஆம் திகதி குறித்த அகழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான தோதான கட்டளைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சட்டத்தரணி முபாரக் முஹாசன் தெரிவிக்கையில்,
குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கானது கடந்த மார்ச் 09ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திலே மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதமன்றத்தினால் ஆக்கப்பட்ட கட்டளைகளுக்கமைவாக எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி குறித்த பிரதேசத்தை அகழ்வதென மன்றினால் கட்டளையாக்கப்பட்டது.

அதன் நிமிர்த்தம் கடந்த தினத்திலே நீதிமன்றிலே பிரசன்னமாகியிருந்த காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டோர் குறித்த மனிதப் புதைகுழி அமைந்துள்ளாக நம்பப்படுகின்ற பிரதேசத்திற்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

ஏற்கனவே கௌரவ மன்றினால் அப்பிரதேசம் ஒரு குற்றப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டு பொலிசாரினால் பாதுகாப்புப் பட்டிகள் இடப்பட்டிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் உள்ளிட்டோர் மேற்கொண்ட அந்த கள விஜயத்தின் போது அந்தப் பாதுகாப்புப் பட்டிகள் அகற்றப்பட்டு பௌதீக ரீதியான மாற்றங்கள் இடம்பெற்றிருப்பது தொடர்பிலும் அவதானிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் நகர்த்தல் பிரேரணை மூலம் குறித்த விடயத்தை மன்றுக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து இன்றைய தினம் கௌரவ மன்றினால் குறித்த பிரதேசத்திற்கு நேரடி விஜயமொன்று மேற்கொள்ளப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையிலே பொலிஸாரினால் இடப்பட்டிருந்த பிளாஸ்டிக் பட்டிகள் அகற்றப்பட்டிருப்பதோடு, அங்கிருந்த மரமொன்றும் அகற்றப்பட்டிருந்தது. ஆனால் அவை சந்தேகத்திற்கிடமான புதைகுழி அமையப்பட்டதான அந்த இடத்திலே எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை என்று கௌரவ மன்று திருப்தியடைந்துள்ளது.

அந்த வகையிலே எதிர்வரும் 30ஆம் திகதி குறித்த அகழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான தோதான கட்டளைகளை மன்று ஆக்கியிருக்கின்றது என்று தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

64 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

56 0 0