உந்துருளி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது.!
காலி – பட்டபொல பகுதியில், போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட உந்துருளி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (16) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பட்டபொல – வதுரவில பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட உந்துருளி, 9 மில்லிமீற்றர் ரக 09 தோட்டாக்கள், 01 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக பட்டபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.