உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

எரிசக்தி சவாலை முறியடிப்பதே அரசின் இலக்கு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்களை முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் வலுசக்தி பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்வது குறித்த அவசரக் கலந்துரையாடல் நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையில் அரச சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது குறித்துப் பல முக்கிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

வாராந்த விடுமுறை
அரச ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவதன் ஊடாக எரிசக்தி நுகர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வீட்டிலிருந்து பணி
அத்தியாவசியமற்ற பிரிவுகளில் வீட்டிலிருந்து பணியாற்றுவதன் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. அதிகாரிகளைப் பணிக்கு அழைப்பது குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அந்தந்த நிறுவனத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அத்தியாவசிய துறைகளுக்கு முன்னுரிமை
கல்வி, சுகாதாரம், சுற்றுலா, மீன்பிடி, கைத்தொழில், விவசாயம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளில் குறைந்தபட்ச எரிசக்தி நுகர்வை உறுதிப்படுத்தி, சேவைகளை முன்னெடுக்கும் மாற்றுவழிகள் குறித்து ஜனாதிபதி அறிவுறுத்தினார். இத்துறைசார் நிபுணர்களிடம் இருந்து இது குறித்த விசேட அறிக்கையையும் அவர் கோரியுள்ளார்.

QR முறைமையை வலுப்படுத்தல்
தினசரி எரிபொருள் நுகர்வை முறையாக முகாமைத்துவம் செய்வதே QR முறைமையை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை மேலும் முறைப்படுத்துவதற்குப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சு இணைந்து செயற்படப் பரிந்துரைக்கப்பட்டது.

அரச வைபவங்கள் இரத்து
தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு அரச வைபவங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டது.

விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்
எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு மானிய முறைகள் மூலம் வசதிகளை வழங்கவும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.

தனியார் துறைக்கு அறிவுறுத்தல்
அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தனியார் துறைக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அமைச்சர்களான விஜித ஹேரத், வசந்த சமரசிங்க, வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, சுனில் ஹந்துன்னெத்தி, பிமல் ரத்நாயக்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

64 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

56 0 0