உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

வரிசையை மீறி வருபவர்களுக்கு எரிபொருள் இல்லை பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

எரிபொருள் பெறுவதற்காக வரிசையை மீறி வருபவர் எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என, போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், சில சாரதிகள் வரிசையை மீறி எரிபொருள் பெற முயற்சிக்கும் போது அமைதியற்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனவே, வரிசைக்கு புறம்பாக வருபவர்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் என, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும், பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ,பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.

சில மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் நடைபாதைகளில் நிற்பதால் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், மக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அனைத்து சாரதிகளும் பொறுமையுடன் செயற்படுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதன்போது மேலும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

64 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

56 0 0