உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
20 திங்கள்

மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
74 பார்வைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, இன்று காலை கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

அதிகாலை முதலே முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும் வசந்த மண்டபப் பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, விநாயகப் பெருமான், சிவன் – உமாதேவியார் மற்றும் வள்ளி – தெய்வானை சமேதராக முருகப்பெருமான் வசந்த மண்டபத்திலிருந்து கொடித் தம்பத்திற்கு எழுந்தருளினர். பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓதப்பட, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்களுக்கு மத்தியில் ஆலயக் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான இன்றைய கொடியேற்றத் திருவிழாவில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அருள்பெற்றனர்.

25 நாள்கள் நடைபெறவுள்ள இந்த ஆலய மகோற்சவப் பெருவிழாவில், எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி தேர்த் திருவிழாவும், ஆகஸ்ட் 12ஆம் திகதி ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைமைத்துவம் என்பது அதிகாரமல்ல; பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே.!

“உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல. பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும்” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…

7 0 0
இலங்கை செய்திகள்

மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

அனுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்தர குளம் பகுதியில், நீர் நிரம்பிய குழியொன்றில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

13 0 0
இலங்கை செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு; அரசு இதுவரை தீர்மானிக்கவில்லை.!

பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து அரசு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும், இது தொடர்பாக எதிர்க்கட்சியினரே சமூகத்தில் தவறான நிலைப்பாட்டை…

9 0 0
இலங்கை செய்திகள்

நீண்ட கால இடைவெளிக்குப் பின் நேரில் சந்திக்கும் ரணில் – சஜித்.!

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை…

14 0 0