உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

‘ரீல்ஸ்’ காணொளிகள் எடுக்க தமிழக அமைச்சர்களுக்கு அதிரடித் தடை!

இந்திய செய்திகள் 2 நாட்கள் முன்
100 பார்வைகள்

அரசு பாடசாலைகளில் அமைச்சர்கள் தேவையற்ற ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், ஆய்வுகளின் போது சமூக வலைத்தளங்களுக்காக ‘ரீல்ஸ்’ (Reels) மற்றும் காணொளிகள் எடுப்பதற்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தடை விதித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து அவர் கடும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசுப் பாடசாலைகளுக்குச் சென்று ஆய்வுகள் என்ற பெயரில் காணொளி எடுப்பது போன்ற செயல்களில் அமைச்சர்கள் ஈடுபடக்கூடாது என்றும், தேவையற்ற ஆய்வுகளைத் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமையும் இத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு முதலமைச்சர் வழங்கிய இந்த அறிவுறுத்தல், தற்போது அரசியல் மற்றும் கல்வி தரப்புக்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

ஊழல் முறைப்பாடுகளில் சிக்கினால் பதவி பறிக்கப்படும் – முதல்வர் விஜய் எச்சரிக்கை!

ஊழல் முறைப்பாடுகளில் சிக்கினால் பதவி பறிக்கப்படும் என தமிழக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (16) காலை…

88 0 0
இந்திய செய்திகள்

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் நாட்டை வந்தடைந்தன!

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன. இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக உடல்களை…

114 0 0
இந்திய செய்திகள்

தமிழகத்தின் ‘நலம் TN’ இணையத்தள சேவையை ஆரம்பித்து வைத்தார் முதல்வர் விஜய்

சென்னை மாநில கல்லூரியில் அரசு மருத்தவ சேவைகளை டிஜிட்டல் முறையில் கொண்டு சேர்க்கும் ‘நலம் TN’ இணையதள சேவையை முதல்வர் விஜய் துவங்கி வைத்தார். மேலும் மருத்துவ…

105 0 0
இந்திய செய்திகள்

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை ஆரம்பிக்க உத்தேசம்

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) சார்பில், ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 4.41 இலட்சம் தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான கேள்விப்பத்திரம்…

99 0 0