உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
40 பார்வைகள்

அனுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்தர குளம் பகுதியில், நீர் நிரம்பிய குழியொன்றில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்தர குளம் பகுதியில் உள்ள கற்குவியல்களுக்கு நடுவில் நீர் நிரம்பியிருந்த பகுதியில், நேற்று மேற்படி நபர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடிச் சென்றுள்ளனர். இதன்போது, அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த நொச்சியாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சடலம் மீட்கப்பட்டபோது, அது மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் இருந்தது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அந்தர குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபராவார்.

இந்தச் சம்பவம் குறித்து நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இது சர்வாதிகாரத்தின் முதல் படி! – நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை

“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறியாகும்”…

96 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது!

அம்பாறை மாவட்டம் உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர்…

87 0 0
இலங்கை செய்திகள்

இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் ஒரு முடிவை எட்ட முடியும்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அரச இரசாயனப் பகுப்பாய்வு…

82 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று…

98 0 0