உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

பெருவில் நிலநடுக்கம் – குறைந்தது 6 பேர் பலி!

உலக செய்திகள் 18 மணி நேரம் முன்
46 பார்வைகள்

பெரு நாட்டின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த அனர்த்தத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 300 பேர் இடம்பெயர்ந்தனர் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்.

உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை இரவு 9:24 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஹுவான்காயோ (Huancayo) மாகாணத்தில் உள்ள சிகாயா (Sicaya) நகருக்கு மேற்கே-தென்மேற்கே 2 கிலோமீட்டர் (1.24 மைல்) தொலைவில் மையங்கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்று பெருவின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன அல்லது கட்டமைப்பு ரீதியான சேதங்களுக்கு உள்ளாகின.

இவற்றில் சோங்கோஸ் பாஜோவில் (Chongos Bajo) அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க “சாண்டியாகோ டி லியோன்” (Santiago de León) தேவாலயம் மற்றும் முன்னாள் கன்னியர் மடம் ஆகியவையும் அடங்கும்.

1565-இல் கட்டப்பட்ட இக்கட்டிடம், 16-ஆம் நூற்றாண்டின் “கட்டிடக்கலைச் சிறப்புமிக்க பொக்கிஷம்” என்பதால் தேசிய பாரம்பரியச் சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலின் “நெருப்பு வளையம்” (Ring of Fire) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பெரு நாட்டில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

2007-ல், பெருவின் இகா பிராந்தியத்தில் உள்ள பிஸ்கோ மாகாணத்தை 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில், கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

தாக்குதலுக்கு மத்தியிலும் மறைமுக இராஜதந்திரப் பேச்சுகள் தொடர்வதாக ஈரான் அறிவிப்பு!

அமெரிக்கா நடத்திய சமீபத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியிலும், மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவுடனான மறைமுக இராஜதந்திரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் வெளிவிவகார அமைச்சின்…

81 0 0
உலக செய்திகள்

ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை!

ஜோர்தானின் அக்கபா சர்வதேச வானூர்தி நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் “குறிப்பிட்ட மற்றும் நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல்” இருப்பதாகக் கூறி, தமது நாட்டுப் பிரஜைகளை, அந்த பகுதிகளுக்குச்…

51 0 0
உலக செய்திகள்

ஈராக்கில் இருந்து மாற்று வழி ஊடாக எண்ணெயை ஏற்றுமதி செய்யத் தீர்மானம்!

ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பதால் ஈராக்கில் இருந்து சிரியா வழியாக மத்திய தரைக்கடலுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்காக, பழைய எண்ணெய் குழாய் வழியை புதுப்பித்து மீண்டும்…

34 0 0
உலக செய்திகள்

மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கம்!

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மூலம் ஃபேஸ்புக் சமூக…

35 0 0