உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈராக்கில் ஈரான் தாக்குதல் – அமெரிக்க இராணுவச் சிப்பாய் பலி!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
83 பார்வைகள்

வட ஈராக்கில் ஈரான் நடத்திய தாக்குதலில் தமது படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய தாக்குதல் ஆளில்லா விமானம் ஒன்றில் இருந்த வெடிக்காத வெடிபொருளை கட்டுப்பாடான முறையில் வெடிக்கச் செய்த நடவடிக்கையின் போதே குறித்த அமெரிக்க வீரர் கொல்லப்பட்டதாகவும், இதில் இரண்டாவது படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

ஜோர்தானில் உள்ள தளம் ஒன்றின் மீதான தாக்குதலில் இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டு மற்றொருவர் காணாமல் போன சம்பவம் இடம்பெற்று ஒருநாளுக்கு பின்னர் நேற்று இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜோர்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைத் தேடியதன் பின்னர், அடையாளம் காணப்படாத எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த எச்சங்களை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து எட்டாவது நாளாகத் தமக்கு மத்தியில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மை நாட்களில் இரு தரப்பினரும் முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஆரம்பகட்ட போர்நிறுத்தம் அமுலுக்கு வந்து ஒரு மாதத்திற்குள்ளேயே அது தோல்வியடைந்ததையடுத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை வொஷிங்டன் மீண்டும் அமுல்படுத்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தெஹ்ரான், அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மீதும் இலக்கு வைத்துள்ளது.

இதுவரையான இந்த மோதலில் பலியான அமெரிக்கர்களின் எண்ணிக்கை தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கடந்த மூன்று வாரங்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0