உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சீனாவில் பாரிய நிலச்சரிவு.!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
103 பார்வைகள்

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் 800-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.10 மணியளவில், பெங்சுய் மாவட்டம் ( Pengshui County ) இல் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக சீன அரசின் ஊடகமான CCTV வெளியிட்ட தகவலின்படி, மண் மற்றும் பாறைகள் சரிந்து குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளை சூழ்ந்ததால் பலர் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மாவட்ட நிர்வாகத் தலைவர் ரென் சுஜியாங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
இதுவரை 18 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 8 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 34 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறதாக குறிப்பிட்டார்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிகவும் செங்குத்தான மற்றும் கணிக்க முடியாத நில அமைப்பைக் கொண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மலைச்சரிவின் விளிம்புகளில் இன்னும் தளர்வான பாறைகள் காணப்படுவதால், மீட்புப் பணிகள் மிகுந்த அவதானத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக சீன அரசு 50 மில்லியன் யுவானை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கவும், மீட்புப் பணிகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என உரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, சீன ஜனாதிபதி, நிலச்சரிவுக்கான காரணத்தை விரைவாகக் கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களைத் தடுக்க புவியியல் அபாயங்கள் மற்றும் சாத்தியமான ஆபத்துகளை முழுமையாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0