உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

தலைமைத்துவம் என்பது அதிகாரமல்ல; பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
34 பார்வைகள்

“உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல. பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும்” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது’ வழங்கும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிறுமிகளின் ஒழுக்கம், நேர்மை மற்றும் சமூக அர்ப்பணிப்பைப் பாராட்டி, இம்முறை விருது விழாவில் 338 ஜனாதிபதி விருதுகளும், 12 பிரதமர் விருதுகளும் உள்ளடங்கலாக மொத்தம் 350 விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பிரதமர் நேரில் வழங்கி கௌரவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,
“பெண் சாரணர் இயக்கத்தின் முக்கிய வலிமையே பின்னணி எதுவாக இருந்தாலும் சகலருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதாகும். இன்று யுவதிகள் அனைத்துத் துறைகளிலும் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குத் தேவையான சம வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இளம் தலைவிகளாகிய நீங்கள் முன்வர வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமன்றி, ஒழுக்கநெறி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட பிரஜைகளை உருவாக்குவது இன்றியமையாதது. அதற்கு சாரணர் இயக்கம் ஆற்றி வரும் பங்களிப்பு பாராட்டத்தக்கது.” – என்றார்.

இலங்கையில் 1917ஆம் ஆண்டு கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சாரணர் இயக்கம், இன்று ஏழு பிரிவுகளாகச் செயற்பட்டு வருகின்றது. இதில் ஒரு பெண் சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த அங்கீகாரமாக ‘ஜனாதிபதி விருது’ கருதப்படுகின்றது. பல்வேறு சவால்கள் மற்றும் பரீட்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் சாரணர்களுக்கே இந்த உயரிய விருது வழங்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் தலைவி ஸ்வர்ணிகா பிடிகல, முதன்மை ஆணையாளர் கலாநிதி குஷாந்தா ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள், விருது பெற்ற சாரணர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இது சர்வாதிகாரத்தின் முதல் படி! – நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை

“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறியாகும்”…

96 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது!

அம்பாறை மாவட்டம் உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர்…

87 0 0
இலங்கை செய்திகள்

இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் ஒரு முடிவை எட்ட முடியும்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அரச இரசாயனப் பகுப்பாய்வு…

82 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று…

98 0 0