உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழரசு – ‘சங்கு’ அணி யாழில் திடீர் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
132 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார், சி.வேந்தன் மற்றும் நா.இரட்ணலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின்போது, நாட்டின் சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது என்று சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

56 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

69 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

81 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

72 0 0