உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

செம்மணிப் புதைகுழியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
25 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆம் நாள் அகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 437 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 428 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இன்றைய அகழ்வின் போது வெள்ளை நிற பாசிமணியும், இரும்புத் தகட்டுத் துண்டு ஒன்றும், வளையல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டு சான்றுப்பொருட்களாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்வு.!

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்லூரியின் அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இரு சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் வகையில்…

21 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை.!

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

நடைபவனியில் சுமந்திரன் கலந்து கொள்ள மாட்டார்.!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே…

19 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.!

கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தவலந்தனை தொண்டமான் கலாச்சார…

24 0 0