உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு; அரசு இதுவரை தீர்மானிக்கவில்லை.!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
28 பார்வைகள்

பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து அரசு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும், இது தொடர்பாக எதிர்க்கட்சியினரே சமூகத்தில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் தற்போதைய பிரதான பேசுபொருளாக உள்ள நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு விவகாரம் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
“நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி குற்றம் சுமத்துகின்றனர். கடந்த காலங்களில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் வீட்டுக்குக் கல்லெறிந்தவர்களும், ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிப் பிணையில் இருப்பவர்களும் இன்று நீதித்துறை சுதந்திரம் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

கடந்த காலங்களைப் போன்று ஜனாதிபதி அல்லது பிரதமரின் தனிப்பட்ட விருப்பத்துக்கமைய இனி நீதியரசர்களை நியமிக்க முடியாது. அரசமைப்பு பேரவையின் அனுமதியுடன் மாத்திரமே ஜனாதிபதியால் இந்த நியமனங்களை வழங்க முடியும். அதற்கமைய, உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.

நீதித்துறையின் சேவையாளர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது குறித்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சாதக, பாதகக் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. இதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை.

கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட வழக்குகள் தற்போது துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஊழல்வாதிகளும், குற்றவாளிகளும், படுகொலையாளிகளும் அச்சமடைந்து, தப்பித்துக் கொள்வதற்காகவே ‘நீதித்துறைக்கு அச்சுறுத்தல்’ என்ற போலியான குற்றச்சாட்டை முன்வைத்து ஒன்றிணைகின்றார்கள்.

திருடர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இந்த அரசுக்குக் கிடையாது. நாட்டில் நீதித்துறை முழுச் சுதந்திரத்துடன் செயற்படுவதுடன் சட்டத்தின் ஆட்சியும் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் மாத்திரமே தங்களின் கலக்கத்தால் போராடி வருகின்றனர்.” – என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இது சர்வாதிகாரத்தின் முதல் படி! – நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை

“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறியாகும்”…

96 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது!

அம்பாறை மாவட்டம் உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர்…

87 0 0
இலங்கை செய்திகள்

இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் ஒரு முடிவை எட்ட முடியும்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அரச இரசாயனப் பகுப்பாய்வு…

82 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று…

98 0 0