உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

நீண்ட கால இடைவெளிக்குப் பின் நேரில் சந்திக்கும் ரணில் – சஜித்.!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
30 பார்வைகள்

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்குச் செல்லவுள்ளார். சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றதன் பின்னர், அவரது அலுவலகத்துக்கு ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசின் நகர்வுகள் குறித்து ஆராய்வதற்கு, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டமொன்றைக் கூட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் எழுத்துமூலம் கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து தொலைபேசி ஊடாகவும் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். இதற்கிணங்க, எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷவும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசின் இந்த ஓய்வு வயது நீடிப்புத் திட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கருதுவதால், இது குறித்த பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இது சர்வாதிகாரத்தின் முதல் படி! – நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை

“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறியாகும்”…

96 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது!

அம்பாறை மாவட்டம் உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர்…

87 0 0
இலங்கை செய்திகள்

இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் ஒரு முடிவை எட்ட முடியும்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அரச இரசாயனப் பகுப்பாய்வு…

82 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று…

98 0 0