உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
125 பார்வைகள்

நாடுபூராகவும் 1000 மில்லியன் ரூபாய் செலவில் 887 கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றையதினம் 107 கிராமிய பாலம் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட புலோப்பளை ஊடாக செல்வபுரம் செல்லும் வீதியில் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கலந்து கொண்டு பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

தொடர்ந்து பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட கிளாலி பாடசாலை ஊடாக கடற்கரை செல்லும் வீதியில் 1.2 மில்லியன் ரூபாய் செலவில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நாட்டி வைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்!!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை இளைஞன் அனோஜன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த…

32 0 0
இலங்கை செய்திகள்

“ஸ்மைல் பிளீஸ்” : சாமர சம்பத் எம்.பி ஜனாதிபதியை வலியுறுத்தல்

ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் முன்னாள் தலைவர்களை விமர்சித்து கோபமாக உரையாற்றுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் மக்களை சந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில்…

32 0 0
இலங்கை செய்திகள்

அநோஜனின் விடுதலையை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு ஆளுநர் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை…

34 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சை சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு!

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில்…

32 0 0