உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

தமிழ் – முஸ்லிம் கூட்டணி வெறும் கூட்டுச் சாம்பார்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
73 பார்வைகள்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் ‘கூட்டுச் சாம்பார்’ போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-00ப்

“இந்தக் கூட்டணி இலஞ்ச, ஊழல்களை ஒழிப்பதற்கோ அல்லது நாட்டுக்கு நன்மைகளைச் செய்வதற்கோ உருவானது அல்ல.

மாறாக, திருடர்களையும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களையும் பாதுகாப்பதற்கே இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

இந்தக் கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களில் பலர், கடந்த காலங்களில் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தற்போது பிணையில் இருப்பவர்களாவர்.

சிறைத்தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறான தரப்பினர் அரசை வீழ்த்தத் திட்டமிடுகின்றனர்.” – என்றார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் சந்திரசேகர், “எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசை யாராலும் அசைக்க முடியாது.

அவர்கள் கூட்டணிகளை அமைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்து, மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.” – என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

70 0 0