உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பில் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை – அமைச்சர் நளிந்த விளக்கம்

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
79 பார்வைகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவில் அரசு இதுவரை எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பெருமளவிலான வழக்குகள், நீதி நிர்வாகத்தில் ஏற்படும் தாமதங்கள், நீதித்துறை அதிகாரிகளின் பற்றாக்குறை, தொழில் வல்லுநர்களின் இடப்பெயர்வு மற்றும் அதிகரித்து வரும் சராசரி ஆயுள் காலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த விடயத்தில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாக, மேலதிக அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

அரசு தனது இறுதி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்றும், இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து இந்த முன்மொழிவு குறித்து முரண்பாடான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும்,  இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக அவை அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நீதித்துறை அதிகாரிகளை ஆள்சேர்ப்பு செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் இன்மையால் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று குறிப்பிட்டார். உதாரணமாக, திட்டமிடப்பட்ட 50 நீதிவான் பதவிகளுக்கு 33 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

70 0 0