உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தாத்தாவால் பேத்திக்கு நேர்ந்த கொடூரம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
101 பார்வைகள்

கம்பளை பகுதியில் 12 வயதுடைய தனது பேத்தியை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் துஷ் பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 54 வயதுடைய நபரை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகளை ஆரம்பித்த கம்பளை பொலிஸார், 54 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதவான் சரசி ஸ்ரீ பரணமன், சந்தேகநபரை ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, சந்தேகநபர் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஆவார். பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது மகன்களில் ஒருவரின் மகளாகும். சிறுமியின் தாயார் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுமிக்கு பத்து வயதாக இருந்தபோது முதன்முறையாக இந்த துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகவும், அதன் பின்னரும் தொடர்ச்சியாக அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0