உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

விசேட டெங்கு ஒழிப்பு சிரமதானம்.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
52 பார்வைகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் டெங்கு பரவல் அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் இந்தச் சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பாடசாலையின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழல்கள், நுளம்புகள் பெருக்கமடையாத வகையில் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டுத் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ் விசேட சமூக பணியானது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி.பரமேஸ்வரனின் நேரடி வழிகாட்டலில், பாடசாலை அதிபர் ரி.கே.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வீரமுனை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன், பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து அர்ப்பணிப்புடன் இப்பணியை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில்…

66 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை!

கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை…

55 0 0
இலங்கை செய்திகள்

செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக…

86 0 0
இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

54 0 0