உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

எரிபொருள் நெருக்கடி: பாடசாலைகளில் விசேட மாற்றங்கள் அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு, பாடசாலைகளின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு கல்வி அமைச்சு விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தல்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.

அதன்படி, ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் இனி திட்டமிடப்படவுள்ள அனைத்து கல்விச் சுற்றுலாக்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.மேலும், பாடசாலை விழாக்கள் அல்லது கொண்டாட்டங்களின் போது அதிக எரிபொருள் பயன்படுத்தும் வாகனப் பேரணிகளுக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்களை நிறைவு செய்யும் நோக்கில், பாடசாலை நேரத்தை வெளி நிகழ்வுகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அரசின் தீர்மானத்துக்கு அமைவாக, ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பாடசாலைகள் இயங்கும்.இந்நிலையில், புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே சுயகற்றலில் ஈடுபடுவதை உறுதி செய்யுமாறும், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குமாறும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எரிசக்தி சேமிப்பை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடைமுறைகள், நாட்டின் நிலைமை சீரடைந்த பின் மீளாய்வு செய்யப்படும்என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

65 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

56 0 0