உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதிய கல்விச் சீர்திருத்தம்; அடுத்த ஆண்டு முதல் பாடசாலை நேர அட்டவணையில் மாற்றம்;

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
96 பார்வைகள்

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளுக்கான நேர அட்டவணைகளில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாகக் கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், இவ்வாண்டின் ஆரம்பத்தில் முதலாம் தரத்துக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக, 2027ஆம் ஆண்டுக்கான 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு முன்னேற்றப்படவுள்ளதுடன், 5ஆம் தரத்துக்கான புதிய பாடத்திட்டம் 2030ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மேலும், க.பொ.த. சாதாரண தரத்துக்கான புதிய பாடத்திட்டம் 2030ஆம் ஆண்டிலும், க.பொ.த. உயர்தரத்துக்கான கல்விச் சீர்திருத்தங்கள் 2033ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, 2027ஆம் ஆண்டு முதல் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் முற்பகல் 11.45 மணி வரையும் மூன்றாம் மற்றும் நான்காம் தர மாணவர்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், ஐந்தாம் ஆண்டு முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று நண்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று முதல் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மருத்துவர்களின்…

0 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நியமனம் இரத்து.!

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவி நியமனம் மற்றும் அதற்குரிய நேர்காணல் நடைமுறைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு (Writ…

60 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்; வைத்தியர் சுகுணனின் பதவி உயர்வுக்கு கண்டனம்.!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பணிக்குச் சென்ற முஸ்லிம் தாதிமார்கள் தலையை மறைத்திருந்தார்கள் எனக் கூறப்பட்டுப் பணியைப் பாரமெடுக்கத் தடை விதிக்கப்பட்டமைக்குக் காரணமானவராகவும், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவருமான…

67 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போ*தைப்பொருள் விற்பனை; ஒருவர் கைது.!

மஸ்கெலியா நகரில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து, உரிமம் இல்லாமல் கஞ்சா கலந்த மதன மோதகம் விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மஸ்கெலியா பொலிஸாரால் (04) நேற்று சந்தேகநபர்…

78 0 0