உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரான்ஸில் இரத்த வங்கிகளைக் குறிவைத்து சைபர் தாக்குதல்!

உலக செய்திகள் 5 மணி நேரம் முன்
89 பார்வைகள்

பிரான்ஸில் உள்ள பல இரத்த வங்கிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் மூலம், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த இரத்தப் பொருட்கள் மற்றும் மாதிரிகளின் வெப்பநிலையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், பிரான்ஸ் அதிகாரிகள் தலையிட்டு, பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னரே குறித்த தாக்குதலைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டிகள் மற்றும் உறைநிலைக் கட்டமைப்புகளைத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி, அவற்றின் வெப்பநிலையை அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள் பதிவாகியுள்ள பின்னணியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல்களால் பெருமளவிலான உணவுப் பொருட்கள் பழுதடைந்ததுடன், மில்லியன் கணக்கான டொலர்கள் மற்றும் யூரோக்கள் பெறுமதியான இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

விர்ஜினியாவில் தன்பாலினத் திருமணத் தடையை நீக்கும் சட்டத் திருத்தம் பொது வாக்கெடுப்பில் வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலுடன் இணைந்து விர்ஜினியா மாகாணத்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், தன்பாலினத் திருமணத்திற்கான அரசியலமைப்புத் தடையை நீக்கும் சட்டத் திருத்தம் வெற்றிபெற்றுள்ளது.கடந்த 2006ஆம் ஆண்டு விர்ஜினியாவில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை – ஈரான் அறிவிப்பு!

இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்…

86 0 0
உலக செய்திகள்

அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் உறுப்பினர் – அப்துல் எல் சயீத்!

அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் உறுப்பினர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார், மிச்சிகன் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்துல் எல்-சயீத்…

88 0 0
உலக செய்திகள்

எனக்கு உடன்பாடில்லாத மசோதாக்களை ஜனநாயகக் கட்சியினர் கொண்டுவந்தால், அவற்றை வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரிப்பேன்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் (Democrats) ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், தான் எதிர்க்கும் சட்டங்களை முடக்குவதற்கு ஜனாபதியின் ‘வீட்டோ’ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

87 0 0