உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாகப்பட்டினம் – காங்கேசனத்துறை கப்பல் சேவை: நவம்பர் மாதத்திற்கான சிறப்பு கட்டணக் குறைப்பு மற்றும் சலுகைகள் அறிவிப்பு!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
133 பார்வைகள்

நாகப்பட்டினம் (NGP) மற்றும் காங்கேசனத்துறை (KKS) இடையே இயக்கப்படும் ‘சுபம் ஃபெர்ரி’ (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கென பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று காங்கேசன்துறை பகுதியில் உள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்திலேயே இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்

இதன் முக்கிய அம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கும் இரு வழித்தடங்களிலும் பயணக் கட்டணம் ₹5,500 ஆகக் குறைக்கப்பட்டு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.

பயணிகள் தங்களது உடமைகளில், 30 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் (Check-in Luggage) மற்றும் 7 கிலோ வரை கைப்பைகள் (Hand Luggage) ஆகியவற்றை எதவித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

30 கிலோவுக்கு மேற்பட்ட கூடுதல் எடைகளுக்கு பின்வரும் திருத்தப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன:

  • 5 கிலோ: ₹1,500 (LKR 5,250 / USD 16)
  • 10 கிலோ: ₹2,500 (LKR 8,750 / USD 26)
  • 30 கிலோ: ₹6,000 (LKR 21,000 / USD 63)

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கு அதிகபட்சமாக 110 பயணிகளும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அதிகபட்சமாக 150 பயணிகளும் பயணிக்கலாம்.

*நாகப்பட்டினம் – காங்கேசனத்துறை (Economy):

  • பெரியவர்கள் (Adult): ₹5,500 | LKR 19,250 | USD 58
  • குழந்தைகள் (Child): ₹5,000 | LKR 17,500 | USD 53
  • காங்கேசனத்துறை – நாகப்பட்டினம் (Economy & Pre Eco):
    • Economy – பெரியவர்கள்: ₹5,500 | LKR 19,250 | USD 58
    • Economy – குழந்தைகள்: ₹5,000 | LKR 17,500 | USD 53
    • Pre Eco – பெரியவர்கள்: ₹6,000 | LKR 21,000 | USD 64
    • Pre Eco – குழந்தைகள்: ₹5,500 | LKR 17,250 | USD 58

நவம்பர் மாதத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் னவும் கடந்த வருடம்போல் இம்முறை மழையுடனான பருவகாலத்திற்கு சேவை நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பெட்ரோலியப் பொருட்கள் மீதான ஏற்றுமதி வரிகளை உயர்த்தியது இந்திய அரசு!

புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலில், பெட்ரோலியப் பொருட்களுக்கான வரிகளை மத்திய அரசு தொடர்ந்து மீளாய்வு செய்து வரும் நிலையில், டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு 14…

93 0 0
இந்திய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறப்பு

மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று (17) நடை திறக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பூஜைகளுடன் திறக்கப்பட்டது. முதல் நாளில்…

74 0 0
இந்திய செய்திகள்

சச்சினுடன் வீதியில் கிறிக்கெட் விளையாடிய பிரித்தானிய அரச தம்பதியினர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன், தமது பயணத்தின் முதல் நாளான இன்று மும்பையில் நடைபெற்ற…

86 0 0
இந்திய செய்திகள்

சீனாவுக்கு எதிரான தொழில்நுட்பக் கூட்டணியில் இந்தியா?

சீனா மேம்பட்ட தொழில்நுட்பங்களை, குறிப்பாக உயர்தர செமிகண்டக்டர் சிப்களைப் பெறுவது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) விநியோகச்…

109 0 0