உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
15 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் உறுப்பினர் – அப்துல் எல் சயீத்!

உலக செய்திகள் 1 வாரம் முன்
133 பார்வைகள்

அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் உறுப்பினர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார், மிச்சிகன் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்துல் எல்-சயீத் (Abdul El-Sayed).

முற்போக்கு ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான அப்துல் எல்-சயீத், கடுமையான தேர்தல் போட்டிக்குப் பின்னர் குடியரசுக் கட்சியின் மைக் ரோஜர்ஸை (Mike Rogers) தோற்கடித்து, மிச்சிகனில் செனட் ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் செனட் உறுப்பினராகத் தெரிவான முதல் முஸ்லிம் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

எகிப்திலிருந்து குடியேறிய ஒருவரின் மகனான எல்-சயீத், இதற்கு முன்னர் எந்தவொரு தேர்தல் மூலம் தெரிவான அரசியல் பதவியையும் வகித்ததில்லை. அவர் பொதுச் சுகாதாரத்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர்.

அனைவருக்கும் சுகாதாரச் சேவையை உறுதிப்படுத்துதல், தேர்தல்களில் வெளிநிதி ஆதிக்கத்தைத் தடுத்தல் மற்றும் இஸ்ரேலின் கொள்கைகளைத் தீவிரமாக விமர்சித்தல் உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தி அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortez) உள்ளிட்ட முற்போக்கு அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்ற இவரது வெற்றி, 2028ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகக் கட்சியின் இடதுசாரி அணியின் செல்வாக்கை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பயணிகள் கப்பல் மீது மோதிய பாரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்.!

அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றில் நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்றின் மீது பாரிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை (13) மோதிய விபத்தில்,…

90 0 0
உலக செய்திகள்

நேபாளத்தில் மின்சார ஊர்தி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ; 14 பேர் உயி@ரிழப்பு!

நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில் மின்சார பயணிகள் மைக்ரோபஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 700 மீற்றர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன்,…

107 0 0
உலக செய்திகள்

ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் தேவையில்லை! : ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெயின் விலை அதிகரிப்பு!!

ஈரானுடன் வொஷிங்டனுக்கு இனி எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்வடைந்துள்ளன. “ஈரானுடன் எங்களுக்கு எந்த…

99 0 0
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 23 வாகனங்கள் மோதி கோர விபத்து : 14 பேர் ப@லி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இடம்பெற்ற பாரிய வாகன விபத்தும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தும் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர்…

96 0 0