உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விர்ஜினியாவில் தன்பாலினத் திருமணத் தடையை நீக்கும் சட்டத் திருத்தம் பொது வாக்கெடுப்பில் வெற்றி!

உலக செய்திகள் 4 மணி நேரம் முன்
84 பார்வைகள்

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலுடன் இணைந்து விர்ஜினியா மாகாணத்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், தன்பாலினத் திருமணத்திற்கான அரசியலமைப்புத் தடையை நீக்கும் சட்டத் திருத்தம் வெற்றிபெற்றுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு விர்ஜினியாவில் தன்பாலினத் திருமணங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

எனினும், 2015ஆம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் தன்பாலினத் திருமணங்களுக்கு நாடளாவிய ரீதியில் சட்ட அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்து, குறித்த தடை நடைமுறைப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றது.

இந்நிலையில், தடையை அரசியலமைப்பிலிருந்து நீக்கி திருமண சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 56.2 சதவீதமானோர் ஆதரவாகவும், 43.8 சதவீதமானோர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம், பாலின வேறுபாடின்றி இரண்டு வயது வந்தவர்களுக்கு இடையிலான சட்டபூர்வமான திருமணங்களுக்கு விர்ஜினியா மாகாண அரசியலமைப்பில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பிரான்ஸில் இரத்த வங்கிகளைக் குறிவைத்து சைபர் தாக்குதல்!

பிரான்ஸில் உள்ள பல இரத்த வங்கிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் மூலம், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த இரத்தப் பொருட்கள் மற்றும் மாதிரிகளின் வெப்பநிலையை அதிகரிக்க முயற்சி…

88 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை – ஈரான் அறிவிப்பு!

இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்…

86 0 0
உலக செய்திகள்

அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் உறுப்பினர் – அப்துல் எல் சயீத்!

அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் உறுப்பினர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார், மிச்சிகன் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்துல் எல்-சயீத்…

88 0 0
உலக செய்திகள்

எனக்கு உடன்பாடில்லாத மசோதாக்களை ஜனநாயகக் கட்சியினர் கொண்டுவந்தால், அவற்றை வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரிப்பேன்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் (Democrats) ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், தான் எதிர்க்கும் சட்டங்களை முடக்குவதற்கு ஜனாபதியின் ‘வீட்டோ’ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

87 0 0