“உங்களை நம்பித்தான் இருக்கிறேன்” : மாணவர்களுக்கு விஜய் கொடுத்த உத்வேகம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய், மாணவர்களிடையே உத்வேகமளிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர், “தான் இங்கு முதலமைச்சராகவோ, அரசியல் பேசவோ அல்லது ஓட்டுக் கேட்கவோ வரவில்லை. எப்போதும் போல உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன்.உங்களுக்காகச் சேர்த்துதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் 2029-க்கு இப்போதே தயார் செய்கிறார் என்று சிலர் நினைக்கலாம், ஆனால் தான் இங்கு அரசியல் பேச வரவில்லை” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், “மாணவர்களாகிய உங்களுக்கு கட்சி, அரசியல் எதுவும் தேவையில்லை. முதலில் பெரிதாகச் சாதனை செய்யுங்கள், உங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள். அதன் பின்னர் ஊரைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் யோசியுங்கள்.
உங்களை நம்பித்தான் உங்கள் பெற்றோர்கள் இருக்கிறார்கள். தானும் உங்களை நம்பித்தான் இருக்கிறேன். முழுத் தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொள்வது குறித்துப் பேசிய விஜய், “தனித்தன்மையுடன் இருங்கள். உங்களைத் தடுக்க சிலர் முயற்சி செய்வார்கள், ஆனால் அந்தத் தடைகளைக் கண்டு பயப்படாதீர்கள் என அறிவுரை வழங்கினார்.


