உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நியமனம் இரத்து.!

இலங்கை செய்திகள் 27 நிமிடங்கள் முன்
62 பார்வைகள்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவி நியமனம் மற்றும் அதற்குரிய நேர்காணல் நடைமுறைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு (Writ Application) வழக்கு விசாரணைகளின் முடிவில், ஏற்கனவே வழங்கப்பட்ட நியமனத்தை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவி நியமனம் மற்றும் அதற்குரிய நேர்காணல் நடைமுறைகள் தொடர்பில் பதவி நியமன விடயத்தை தடுத்து நிறுத்துகின்ற வகையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் ரிட் மனு மீதான விசாரணை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் முன்னிலையில் இன்று (05) விசாரணைக்கு பின்னர் தீர்ப்பிற்காக அழைக்கப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவிக்காக விண்ணப்பித்த தகுதியுடைய விண்ணப்பதாரர் ஒருவரினால் இம் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் இவ்வழக்கில் கிழக்கு மாகாண ஆளுநர், தவிசாளர், பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் திணைக்கள உயரதிகாரிகள் 15 பேர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் பெயரிடப்பட்டிருந்தனர்.

இதன்போது கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவிக்காக மேற்கொள்ளப்பட்ட நியமனம் சட்டமுரணானது என அறிவித்துள்ள நீதிமன்றம் அப் பதவிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நியமனத்தை உடனடியாக இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

குறித்த பதவிக்காக நடத்தப்பட்ட முந்தைய நேர்காணல்கள் மற்றும் அதன் மூலமான மதிப்பீடுகள் அனைத்தும் செல்லுபடியற்றவை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எதிர்காலத்தில் நேர்முகத் தேர்வுகளை நடத்தும் போது, இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத உயர்கல்விச் சான்றிதழ்களுக்குப் புள்ளிகள் வழங்குவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத (Unverified) உயர்கல்வி சான்றிதழ்களுக்குப் புள்ளிகள் வழங்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே, அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டுத் திட்டத்திற்கு (Approved Marking Scheme) அமைவாக தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் புதிய நேர்காணலை நடத்தி எதிர்காலத்தில் இடம்பெறும் நேர்முகப் பரீட்சைகளின்போது முறையாகச் சரிபார்க்கப்பட்ட பட்டச் சான்றிதழ்களை மாத்திரமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சரிபார்க்கப்படாத சான்றிதழ்களின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கவோ, அவற்றைத் தகைமைகளாகக் கருதவோ கூடாது அதில் அதிக புள்ளிகளைப் பெறும் தகுதியானவரைப் பணிப்பாளராக நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கடந்த தவணையின் போது குறித்த நேர்முகப்பரீட்சை மற்றும் நியமனத்தால் பாதிக்கப்பட்ட பிரதிவாதியான கால்நடை வைத்தியர் முஹமட் அபூபக்கர் நதீர் என்பவர் சார்பாக ஆஜரான சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர், தவிசாளர், பொதுச்சேவை ஆணைக்குழு உட்பட 15 பேர் கொண்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் வாதப் பிரதிவாதங்களை அடுத்து இரு தரப்பினரின் எழுத்து மூல சமர்ப்பணத்தை செய்யுமாறும் பணிக்கப்பட்டு இன்று நவம்பர் மாதம் 05 ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த பதவி நியமன விவகாரம் தொடர்பில் மனுதாரரின் வழக்கினை ஆதரித்து சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் ஆஜராகி இருந்தார்.

குறித்த நேர்முகப்பரீட்சை மற்றும் நியமனத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை வைத்தியர் முஹமட் அபூபக்கர் நதீர் என்பவர் தனக்கு எதிரான அநீதியை கேள்விக்குட்படுத்தி சட்டத்தரணி ஊடாக கல்முனை மேல் நீதிமன்றம் ஊடாக ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இவர் இம்மனுவில் கிழக்கு மாகாண ஆளுநர், தவிசாளர், பொதுச் சேவை ஆணைக்குழு உட்பட 15 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த 2025 ஆண்டு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளரை தெரிவு செய்வதற்கு குறித்த நேர்முக பரீட்சை நடாத்தப்பட்டிருந்தது. இதன்போது மனுதாரரான அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த கால்நடை வைத்தியர் முஹமட் அபூபக்கர் நதீர் என்பவர் நேர்முக பரீட்சை மற்றும் பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்கு வழங்கப்பட்ட புள்ளிகள் விடயத்திலும் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத (Unverified) உயர்கல்வி சான்றிதழ்களுக்குப் புள்ளிகள் வழங்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளதுடன் நேர்முக பரீட்சையின் போது மதிப்பெண் வழங்கப்பட்ட மதிப்பெண் தாளில் உரிய தகைமை நிலையில் இருந்த தகைமையற்ற நிலையில் இருந்தவருக்கு மோசடியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பருத்தித்துறை நகரில் திடீர் சோதனை; வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு.!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் சோதனை நடவடிக்கையின்போது காலாவதியான அரிசி உள்ளிட்ட பல உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.…

1 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று நண்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று முதல் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மருத்துவர்களின்…

59 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்; வைத்தியர் சுகுணனின் பதவி உயர்வுக்கு கண்டனம்.!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பணிக்குச் சென்ற முஸ்லிம் தாதிமார்கள் தலையை மறைத்திருந்தார்கள் எனக் கூறப்பட்டுப் பணியைப் பாரமெடுக்கத் தடை விதிக்கப்பட்டமைக்குக் காரணமானவராகவும், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவருமான…

69 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போ*தைப்பொருள் விற்பனை; ஒருவர் கைது.!

மஸ்கெலியா நகரில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து, உரிமம் இல்லாமல் கஞ்சா கலந்த மதன மோதகம் விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மஸ்கெலியா பொலிஸாரால் (04) நேற்று சந்தேகநபர்…

79 0 0