உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து.!

இலங்கை செய்திகள் 30 நிமிடங்கள் முன்
82 பார்வைகள்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று (04.11.2026) காலை இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை திசையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளனர்.

இதன்போது அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு, தனியாருக்குச் சொந்தமான மற்றுமொரு முச்சக்கரவண்டியின் உதவியுடன் காயமடைந்தவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

இதேவேளை, விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அம்புலன்ஸ் இறுதிவரை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விசனம் ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அஸ்வெசும உதவித்தொகை கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர் முறைப்பாடு.!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக, மக்களிடமிருந்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று…

71 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத போ*தைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது.!

இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைக் கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச்…

78 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசின் புதிய சட்டமூலம் அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்.!

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ நாட்டையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்கே வழிவகுக்கும் என்று முன்னாள்…

80 0 0
இலங்கை செய்திகள்

பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி; இருவர் கைது.!

பிரமிட் முறை நிதி நிறுவனமொன்றை நடத்தி பொதுமக்களிடம் இருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…

70 0 0