கப்பம் கேட்டு மிரட்டல்; இருவர் கைது.!
காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனவட்டுன பகுதியில் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு 10 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்டு மிரட்டல் விடுத்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உனவட்டுன பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 19 வயதுடையவர்கள் ஆவர்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை (04) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்கள் போல நடித்து, பணத்தொகையினை கோரி இந்த தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகிறது.


