உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மஹாஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
83 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள மஹாஓயா பொலிஸ் நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லம் பொலிஸ்மா அதிபரும் சட்டத்தரணியுமான பிரியந்த வீரசூரியவினால் நேற்று புதன்கிழமை (4) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வு நிமித்தம் மஹாஓயா பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த பொலிஸ்மா அதிபரை கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார லியனகே மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபருக்குக் கௌரவம் அளிக்கும் வகையில் பொலிஸாரின் விசேட அணிவகுப்பு மரியாதை மற்றும் ஊர்வலம் என்பன நடத்தப்பட்டன.

அதன்பின்னர், அனைத்து மதத் தலைவர்களின் ஆசிகளுடன் கூடிய சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பொலிஸ் பொறுப்பதிகாரியின் புதிய உத்தியோகப்பூர்வ இல்லத்தை பொலிஸ்மா அதிபர் நாடாவெட்டித் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணப் பிராந்திய பொலிஸ் உயர் அதிகாரிகள், மஹாவோயா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று நண்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று முதல் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மருத்துவர்களின்…

1 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நியமனம் இரத்து.!

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவி நியமனம் மற்றும் அதற்குரிய நேர்காணல் நடைமுறைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு (Writ…

60 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்; வைத்தியர் சுகுணனின் பதவி உயர்வுக்கு கண்டனம்.!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பணிக்குச் சென்ற முஸ்லிம் தாதிமார்கள் தலையை மறைத்திருந்தார்கள் எனக் கூறப்பட்டுப் பணியைப் பாரமெடுக்கத் தடை விதிக்கப்பட்டமைக்குக் காரணமானவராகவும், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவருமான…

67 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போ*தைப்பொருள் விற்பனை; ஒருவர் கைது.!

மஸ்கெலியா நகரில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து, உரிமம் இல்லாமல் கஞ்சா கலந்த மதன மோதகம் விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மஸ்கெலியா பொலிஸாரால் (04) நேற்று சந்தேகநபர்…

79 0 0