உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கட்டுப்பாடின்றித் திரியும் மாடுகள்; பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் அவதி.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
121 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரின் பிரதான வீதி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைக் கட்டடப் பகுதிகளில் மாடுகள் கட்டுப்பாடின்றித் திரிவதால், பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு சிரமங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

நகரின் பிரதான வீதிகளில் எவ்வித கட்டுப்பாடுமின்றி உலா வரும் இக் கால்நடைகளால் கடந்த காலங்களில் பல வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், பல பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நகர வீதிப் பாதுகாப்பையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் அச்சுறுத்தும் இப் பாரிய பிரச்சினை தொடர்பாகப் பல தடவைகள் கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களால் எழுத்துப்பூர்வமாகவும் நேரடி முறையீடுகள் மூலமும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை மாநகர சபையினால் எவ்விதத் தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்கப்படாதிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

“பொதுமக்களின் முறைப்பாடுகளை வெறும் எழுத்துக்களாகப் பெறாமல், அவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதே ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் முதன்மையான கடமையாகும். மக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படாவிட்டால், கல்முனை மாநகர சபையின் பொறுப்பு என்ன?” என நகரவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

மாநகர சபை நிர்வாகம் பலமுறை சுட்டிக்காட்டியும் மௌனம் காத்து வரும் நிலையில், இனிமேலும் பாரிய விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படும் வரை அதிகாரிகள் காத்திருக்கப்போகிறார்களா? எனக் கேள்வி எழுப்பும் பொதுமக்கள், இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிடுமாறு உயர்மட்டத் தரப்பினரிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, பிரதான வீதிகளிலும் சந்தைப் பகுதிகளிலும் திரியும் மாடுகளின் உரிமையாளர்களை இனங்கண்டு அவர்களுக்குக் கடுமையான தண்டப்பணங்களை விதித்தல், மாடுகளைக் கைப்பற்றிப் பட்டியில் அடைத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுத்து, வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்முனை மாநகர சபை அவசரமாகச் செயற்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

இடிந்து விழும் நிலையில் உள்ள சொறிக்கல்முனை – வீரமுனை பிரதான வீதி.!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் சொறிக்கல்முனை – வீரமுனை எல்லைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ள ஆபத்தான வளைவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்…

81 0 0
அம்பாறை செய்திகள்

பொலிஸாரை உந்துருளியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர்கள்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரை உந்துருளியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு இளைஞர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம்…

84 0 0
அம்பாறை செய்திகள்

சாய்ந்தமருதில் ஒலிபெருக்கிகளால் தொல்லை; கட்டுப்பாடு விதிக்க மக்கள் கோரிக்கை.!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண் சந்தைப் பகுதியில் ஒலிபெருக்கி சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

90 0 0
அம்பாறை செய்திகள்

ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ கவிதை நாடகம் அரங்கேற்றம்.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் TK/THIRUKKOVIL MMTMV பாடசாலையின் ஆங்கிலப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஆங்கில இலக்கியப் படைப்பான வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ (OTHELLO) கவிதை…

124 0 0