உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ கவிதை நாடகம் அரங்கேற்றம்.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
123 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் TK/THIRUKKOVIL MMTMV பாடசாலையின் ஆங்கிலப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஆங்கில இலக்கியப் படைப்பான வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ (OTHELLO) கவிதை நாடகம் நேற்று (30) பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.

பாடசாலை அதிபர் திருமதி G.K. தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. R.உதயகுமார் கலந்து சிறப்பித்தார்.

மாகாண மட்ட ஆங்கில மொழி தினப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இந்நாடகம், மாணவர்களின் ஆங்கில மொழித் திறன், நாடக ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் மீண்டும் மேடையேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நாடகத்தைப் பார்வையிட்டனர்.

இதன்போது, நாடகத்தின் தயாரிப்பு மற்றும் அரங்கேற்றப் பணிகளில் பங்களிப்புச் செய்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மாகாண மட்ட ஆங்கில மொழி தினப் போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவான மாணவர்களும் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றலையும் கலைத்திறன்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பாடசாலை சமூகத்தின் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

இடிந்து விழும் நிலையில் உள்ள சொறிக்கல்முனை – வீரமுனை பிரதான வீதி.!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் சொறிக்கல்முனை – வீரமுனை எல்லைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ள ஆபத்தான வளைவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்…

81 0 0
அம்பாறை செய்திகள்

பொலிஸாரை உந்துருளியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர்கள்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரை உந்துருளியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு இளைஞர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம்…

84 0 0
அம்பாறை செய்திகள்

சாய்ந்தமருதில் ஒலிபெருக்கிகளால் தொல்லை; கட்டுப்பாடு விதிக்க மக்கள் கோரிக்கை.!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண் சந்தைப் பகுதியில் ஒலிபெருக்கி சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

90 0 0
அம்பாறை செய்திகள்

கட்டுப்பாடின்றித் திரியும் மாடுகள்; பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் அவதி.!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரின் பிரதான வீதி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைக் கட்டடப் பகுதிகளில் மாடுகள் கட்டுப்பாடின்றித் திரிவதால், பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும்…

120 0 0