உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

போ*தைப்பொருட்களுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
27 பார்வைகள்

வெல்லம்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவை பகுதியில் கடந்த புதன்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 8 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, முல்லேரியா பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன்போது அங்கிருந்து மேலும் 1 கிலோகிராம் 42 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, புத்தளம் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (17) மதுரகம பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 26 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் 314 கிராம் 200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திச் சென்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் அவரிடமிருந்த கைப்பேசி என்பனவற்றைப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் வெல்லம்பிட்டி மற்றும் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வர்த்தகர்கள் போராட்டம்.!

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக…

19 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விவாதப் போட்டி.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு…

21 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை, இஸ்லாமாபாத் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு.!

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு…

26 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது; வாழ்வாதாரம் கேள்விக்குறி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக…

25 0 0